புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பள்ளியில் ஜனவரி 1ல் பிறந்து பள்ளிக்கு வந்தகுழந்தைகளுக்கு தட்டுநிறைய புத்தகம்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் ஜனவரி 1ல் பிறந்து ஜனவரி1 அன்று பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்குதட்டுநிறையபுத்தகங்கள் சிறப்புபரிசாக அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புத்தாண்டைமுன்னிட்டு ஜனவரி 1-ல் பிறந்தகுழந்தைகள் ஜனவரி 1 அன்றுபள்ளிக்கு வந்தால் (எந்தபள்ளியில் படிப்பவர்எனினும்) சிறப்புபரிசுகள் உண்டுஎன்றுஅறிவிப்புசெய்யப்பட்டது.அதன்படிஅரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் பல்வேறுதனியார்பள்ளியில் பயிலும்புத்தாண்டுதினத்தில் பிறந்தகுழந்தைகள் பாலமுருகன்,நீரஜா,சுபஸ்ரீ அட்சயா பீரித்திக்கா ஆகியகுழந்தைகள் பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்தனர்.

பள்ளிக்குவந்தகுழந்தைகளுக்குபூங்கொத்துவழங்கிஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி மற்றும் பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்திஆகியோர்பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்களுக்கு ஒரு சில்வர்தட்டு நிறையபுத்தகங்கள் வைத்து புத்தகத்தட்டுவழங்கப்பட்டது. சாக்லேட்டுகள் மற்றும் கேக்குகள் போன்ற இனிப்புகளும் வழங்கினர்.

இந்த விழாவில் பள்ளியின் மேலாண்மை இயக்குநர் நிவேதிதா மூர்த்தி பள்ளியின் ஆலோசகர் நாகாஅதியன் அரசுசிறப்புவழக்கறிஞர்எம்.செந்தில்குமார் பேராசிரியர்கள் அய்யாவு கருப்பையா ஆர்.எஸ்.காசிநாதன் மகாத்மாரவி பள்ளியின் துணைமுதல்வர்குமாரவேல் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி அபிராமசுந்தரி பவானி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.