புதுக்கோட்டை லண்டன் லுக் நர்சரி&பிரைமரி பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
முதல்வர் சரவணச்செல்வி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் ஏஆர்என்.தங்கவேல், புதுகை வரலாறு நிறுவனரும் ஆசிரியருமான சு.சிவசக்திவேல் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். கல்வித்துறையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ராஜேந்திரன், மெர்குரி பள்ளியின் தாளாளர் ரமணன், யோகவானிசி பள்ளியின் தாளாளர் மேசிய சந்தோஷம், மருதம் பள்ளியின் தாளாளர் சுப தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை விழா பெற்றோர்களை மட்டும் இல்லாது வருகை தந்திருந்த பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. பள்ளியில் இந்த ஆண்டு சேரும் எல்கேஜி மாணவர்களுக்கு ரூபாய் 4ஆயிரம் மதிப்பிலான சைக்கிள் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.





