புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நேற்று காலை புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில், மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் சின்னப்பா, துணைத்தலைவர்கள் சத்தியபாலன்,மாரிமுத்து, சவுந்திரராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.சங்கத்தின் மூத்த ஆலோசகர் ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஏவிசிசி கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும்,புதுக்கோட்டை மாவட்ட நீர்நிலை ஆதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோருவது,பணிஓய்வு பெறும் நாளில் அலுவலர்களைபணிநீக்கம் செய்யும் நடைமுறையை தவிர்ப்பது, ஊரக வளர்ச்சி துறை அறிவிக்கும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அனுபவ அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆலோசனையும், ஒத்துழைப்பும் அளிப்பது உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி மறைந்த அலுவலர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
