புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம்

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் முதல் நிலை ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பட்டியில் மிகச் சிறப்பான முறையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, இந்த பொங்கல் விழாவில் விளையாட்டு போட்டிகள், பேச்சுப் போட்டி, நாற்காலி சுற்றுப்போட்டி, பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டிகளில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா ஜெய்சங்கர் தட்டு உள்ளிட்ட பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த பொங்கல் விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் முத்துலட்சுமி சாமியய்யா, துணைத் தலைவர் சித்ரா சௌந்தர்ராஜன், மற்றும் ஊராட்சி செயலாளர் சசிகுமார் மற்றும் உதவியாளர் சோலைராணி வார்டு உறுப்பினர்கள்  தூய்மை காவலர்கள் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.