புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் புதிய வாரச்சந்தை – மணமேல்குடி ஒன்றிய குழுத் தலைவர் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம்  கோட்டைப்பட்டிணத்தில் பொதுமக்கள் கோரிக்கையை முன்னிட்டு புதிய வாரச்சந்தை திறந்துவைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கோட்டைப்பட்டிணம் பெரிய ஊராட்சியாகும் இந்த பகுதியில் வார சந்தை வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். நீண்டகால பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் ஊராட்சி மன்றம் முயற்சி மேற்கொண்டு கோட்டைப்பட்டிணம் பகுதியில் சந்தை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று புதிய வார சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் பத்து லட்சம் செலவில் சந்தை கூடம் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டன. 

புதிய வாரசந்தையை மணமேல்குடி ஒன்றிய குழுத் தலைவர் பரணி கார்த்திகேயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அக்பர் அலி மணமேல்குடி திமுக வடக்கு  ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜன்னத் பீவி சேர்க்கான், பெனாசிர் கலந்தர் நைனா முகமது, சங்கர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், புதிய சந்தை தொடக்க விழாவை முன்னிட்டு சந்தைக்கு வந்த பொதுமக்கள் சுமார் 3000 பேருக்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம்  இலவசமாக வழங்கப்பட்டது.