புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி , பேலட் யூனிட் உள்ளிட்டவைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

அதனடிப்படையில் இன்றையதினம் மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) கலைமணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.