
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் இன்று ஏற்றுக்கொண்டனர்.
சமூக நீதி நாள் என்ற உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு எடுத்துக் கூற அனைத்து அலுவலர்கள், பணியாளர்களும் ஏற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.