புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல், போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 280 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் , இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.4,871 மதிப்பீட்டில் விலையில்லா சலவைப் பெட்டிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொ) எம்.மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

47 + = 48