புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தனியார்பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விளக்க மாநாடு புதுக்கோட்டையில் நடைபெறுகிறது

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விளக்க மாநாடு புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏஎன்எஸ் ஹோட்டலில் ஜனவரி 28ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கை விளக்க மாநாடு நடைபெற இருக்கின்றது.

புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சண்முகநாதன் வரவேற்புரை ஆற்றுகிறார். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சண்முகநாதன், புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் குமரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செல்லத்துரை அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வைக்கிறார். மாநில பொது செயலாளர் கே.ஆர். நந்தகுமார் சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர்கள் அந்தோணி பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். மாநாட்டை வாழ்த்தி ரகுபதி சுப்ரமணியன், காதர் மொய்தீன், சுப்பிரமணியன், ஜோனதன், நாகராஜன், முருகப்பன், ஷேக் சுல்தான், கருப்பையா, தவசீலன், ஜெயக்குமார், ரமேஷ், மகாதேவன், சரவணகுமார், இராஜா, சையது கமாலுதீன், ஜெகதீஸ்வரன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

சுரேஷ்குமார், மதியழகன், அருள், இளங்கோவன், முஜிபுர் ரஹ்மான், பழனிச்சாமி ஆகியோர் விழாவினை ஒருங்கிணைக்கின்றனர் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி உரையாற்றுகிறார். மாநாட்டில் பள்ளி கட்டிடங்களுக்கு சொத்து வரியிலிருந்து விலக்கு பெறவும், விண்ணப்பித்து காத்துள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தொடர் அங்கீகாரம் மற்றும் டிடிசிபி ஆணை வழங்கிட, ஆர்.டி.இ கல்வி கட்டணம் உடனே கிடைத்திட, அனைவருக்கும் ஒரே மாதிரியான நியாயமான கல்வி கட்டணம் நிர்ணயத்திட, நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகிட, தனியார் கல்வி நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய, அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிட மாநாட்டில் அரசை வலியுறுத்த உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இரண்டு மாவட்ட நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

52 − = 43