புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறையும் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறையும் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.

 முகாம் லாரி மார்கெட்டில் நடைபெற்றது. புதுக்கோட்டை பேலஸ் சிட்டி  ரோட்டரி சங்க தலைவர் ஆர்.எம் .துரைமணி தலைமையேற்று நடத்தினார்.

 மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெரினாபேகம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேடு அனைவருக்கும் வழங்கி சிறப்புரையாற்றினார்கள் .

 போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ்மேரி  சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை லாரி ஓட்டுர்களுக்கு எடுத்துரைத்தார்.

 கண்தான கழக தலைவர் கோவிந்தராஜன்   கண்தானம் பற்றிய விழிப்புணர்வை விளக்கினார்கள் .

போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள் போக்குவரத்து   காவலர்கள்  மற்றும்  ஜான்சிராணி ரெட்கிராஸ் புகழேந்தி    செல்வா,  லாரி உரிமையாளர் சங்க தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் ஓட்டுனர்கள் மெக்கானிக்  ஆகியோர் கலந்து கொண்டனர்  நிறைவாக ரோட்டரி சங்க செயலாளர் .பாஸ்கர்  அனைவருக்கும் நன்றி   தெரிவித்தார்.