புதுக்கோட்டை டாக்டர்ஸ் கல்லூரியில் 15 ஆம் ஆண்டு தீப ஒளி ஏற்றும் விழா

புதுக்கோட்டை டாக்டர்ஸ் காலேஜ் & ஸ்கூல் ஆஃ நர்சிங்கில் முதலாம் ஆண்டு மாணவிகளின் தீப ஒளி ஏற்றும் விழா கல்லூரியின் கூட்டரங்கில்  நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் டாக்டர் கே.ஆர்.ராமநாதன்; தலைமை உரையாற்றினார்.   கல்லூரியின் முதல்வர் கயல்விழி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக ரைச்சூர் நவோதயா நர்சிங் கல்லூரியின் முதல்வர் ஹெட்ஸி சுதனகுமாரி மற்றும் கௌரவ  விருந்தினராக  புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்நிலை செவிலியர் கண்காணிப்பாளர் தேன்மொழி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கல்லூரியின் மேனேஜிங் டைரக்டர் ராமதாஸ மற்றும்; அறங்காவலர் பிஎஸ்.கருப்பையா ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கி விழாவினை  சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர் ஹெட்ஸி சுதனகுமாரி மற்றும் கல்லூரியின் முதல்வர் கயல்விழி ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு தீப ஒளி ஏற்றினர். முதல்வர் கயல்விழி உறுதிமொழி வாசிக்க முதலாம் ஆண்டு மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

கல்லூரியின் சிறப்பு விருந்தினர் ஹெட்ஸி சுதனகுமாரி சிறப்பு விருந்தினர் உரையாற்றினார். அவர் தனது உரையில் செவிலியர் படிப்பு மிகவும் உன்னதமானது என்றும் செவிலியர்களின் சேவை மிகவும் புனிதமானது என்றும் கூறினார்.இத்தகைய உன்னதமான படிப்பினை தேர்வு செய்தமைக்காக மாணவிகள் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். நர்சிங் படிப்பு மற்றும் பயிற்சியில் வெற்றி பெறுவதற்காக மாணவிகள் தங்களை எவ்வாறு தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முறைகளை எடுத்துரைத்தார் மேலும் தற்போதைய தலைமுறை மாணவிகளுக்கு ஏற்றவாறு நவீன கற்பித்தல் முறைகளை உபயோகிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். நிறைவாக கல்லூரியின் விரிவுரையாளர் சண்முகப்பிரியா நன்றி கூறினார்.