பிரபல ஜிவல்லரி குழுமமான ஜோஸ் ஆலுக்காஸின் புத்தம் புதிய ஷோரூம், புதுக்கோட்டை கீழ ராஜா வீதியில் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த புதிய ஷோரூமை, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் வழக்கறிஞர்,நோட்டரி கே.எம்.முருகப்பன் ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றிவைத்தனர். ஜோஸ் ஆலுக்காஸ் நிர்வாக இயக்குனர்கள் பால் ஜெ ஆலுக்கா, ஜான் ஆலுக்கா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த் கலந்துகொண்டு திறப்பு விழாவை வண்ணமயமான ஒரு நிகழ்ச்சியாக மாற்றி விட்டார். புதிய ஷோரூமில் அதிநவீன டிசைன்களில் தங்கம், வைரம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகளின் பிரம்மாண்டமான கலெக்ஷன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

புதிய ஷோரூம் திறப்பு விழாவையொட்டி, பல திறப்பு விழா சலுகைகளை ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தங்க நகைகளை வாங்கும் போது வெள்ளி நாணயங்கள் இலவசமாக வழங்கப்படும். அத்துடன் வைர நகைகள் மீது 20%, பிளாட்டினம் நகைகள் மீது 7% தள்ளுபடி பெறலாம், மேலும், வாடிக்கையாளர்கள் 0% சேதாரத்தில் மெட்டி, வெள்ளி கொலுசு மற்றும் அரைஞாண் கொடி போன்றவற்றை வாங்கலாம், வாடிக்கையாளர்கள் தங்களின் 22 கேரட் தங்க நகைகளை புதிய BIS ஹால்மார்க் முத்திரை பதித்த 916 தங்க நகைகளுக்கு அல்லது IGI சான்றளித்த வைர நகைகளுக்கு அதன் விலை மதிப்பில் மற்றும் எடையில் எந்த குறையும் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம். திருமண நகை வாங்குபவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி காத்திருக்கின்றன. எளிதான மாதாந்திர தவணைத் திட்டத்தில் மூலம் தங்கத்தை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் தங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டையில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய ஷோரூமில், உங்களுக்குள் இருக்கும் ராஜ கம்பீரத்தை வெளிக்கொணரக்கூடிய “ராஜமுகி”,உங்களின் உள் பிரகாசத்தை வெளிக்காட்ட கூடிய “தாரா”, பெருமையையும் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் “பரம்பரா” மற்றும் திருமணத்துக்கான “சுப மாங்கல்யம்” என பொது வகையான நகைகளின் பல விதமான கலெக்ஷன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள. ஷோரூமில் அதிக அளவில் வெள்ளி நகைகளும், வெள்ளி பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நீங்கள் இதுவரை பெற்றிடாத இணையற்ற நகைகள் வாங்கும் ஷாப்பிங் அனுபவத்தை பெற ஷோருமுக்கு வருகை தாருங்கள். இந்த புதிய ஷோரூம் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும். அத்துடன், வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நகைகளை வாங்கி மகிழ இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும்படி ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.புதிய ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ரூபாய் 20 லட்சம் காசோலையை கல்வி மேம்பாட்டிற்காக வழங்கினர். அதற்கு சட்டத்துறை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.