புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம்

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம்  வழிகாட்டுதலின் படி புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் முகாமை தொடங்கி வைத்து ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவில் கல்லூரியின் முதல்வர் பரசுராமன் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ரத்த தானம் செய்தனர் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாநிதி மற்றும் நாட்டு நலப்பணித்து அலுவலர்கள் பங்கேற்றியிருந்தனர் முகாமில் 74 யூனிட் ரத்ததானம் செய்யப்பட்டது. முகாமினை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலக கிஷோர் மற்றும் அவரது மருத்துவ குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.