புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளரிடம் கோரிக்கை மனு

புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் க. குணசேகரன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து கட்டண உயர்வையும் சாமானிய மக்களின் இயலாமையை  கருத்தில் கொண்டு  புதுக்கோட்டை நகரில் இருந்து சென்னைக்கு சொகுசு பேருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பஸ் வசதி செய்து தர வேண்டும் என்றும் மேலும் பெங்களூர், கொடைக்கானல், வேலூர் போன்ற ஊர்களுக்கு பேருந்து போக்குவரத்து தேவை என்பதையும் மேலும் புதுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு ரயில் வரும் போது சரியான நேரத்திற்கு பஸ் போக்குவரத்து  வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவினை பொது மேலாளரிடம் வழங்கப்பட்டது, அதனை பரிசீலித்து செய்து தருவதாக கூறினார் நிகழ்ச்சியில் செயலாளர் இப்ராஹிம் பாபு திட்டத் தலைவர் ராஜா முஹம்மது, துணைச் செயலாளர்கள் முகமது அப்துல்லா, பாரூக் ஜெய்லானி மற்றும் சையது முஸ்தபா கலந்து கொண்டனர்.