புதுக்கோட்டை கிரவுண்ட் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவராக ரவிக்குமார் பதவி ஏற்றுக்கொண்டார்

புதுக்கோட்டையில், தன்னிகரில்லா தனிச்சேவை அளித்து வரும் புதுக்கோட்டை கிரவுண்ட் சிட்டிரோட்டரி சங்க முப்பெரும் (22வது) விழா மா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
2021-2022 ஆண்டு புதிய தலைவராக, மாஞ்சன் விடுதி அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் அ.இரவிக்குமார் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து பிஎல்.செந்தில்குமார் செயலராகவும், ஆர்எம். தங்கதுரை பொருளராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.சிறப்பு விருந்தினராக மேஜர் டோனர் முன்னாள் ஆளுநர் மூத்த மருத்துவர் டாக்டர் ஏ.ஜமீர் பாஷா கலந்து கொண்டு பதவி ஏற்பு விழாவை சிறப்பித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி. சத்தியமூர்த்தி சிறப்புரையாற்ற, பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் மு பாரதிதாசன், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் பி. அந்தோனிசாமி துணை ஆளுநர் ஆர். கருணாகரன் மற்றும் பல்வேறு ரோட்டரி சங்கங்களின் உறுப்பினர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.மாஞ்சன்விடுதி அரசு மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ந.பாலு என்ற பாலசுப்ரமணியனுக்கு தியாகச்செம்மல் என்ற விருதும், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கோவிந்தராஜ்கு நல்லாசிரியர் விருதும், திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வி.முருகையனுக்கு நல்லாசிரியர் விருதும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டது. முன்னாள் தலைவர் கோபிநாத சிவம் வரவேற்புரையாற்றினார் முன்னாள் செயலாளர் செந்தில் கணேசன் நன்றி கூறினார் விழாவில் சங்கத்தின் துணை நிர்வாகிகளும் பங்கேற்று விழாவை தொகுத்து வழங்கினார்.