புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ஆய்வுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ஊரகம் வீடு கட்டும் பணிகளை விரைவுப்படுத்த வெளி ஒப்பந்த அடிப்படை முறையில்  பணிபுரியும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டை மாவட்டசெயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி ஜோஸ்பின் நிர்மலா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் வீட்டுவசதி மற்றும் சுகாதாரம் கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி கலைவாணி ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். இதில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன்,  வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டுவசதி மற்றும் சுகாதாரம் ரமேஷ், துணைவட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும்  அனைத்து ஊராட்சி ஒன்றிய தொழில்நுட்ப உதவியாளர்களும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் வேலைகளை விரைவாக முடிக்கவும், துவங்கப்படாத நிலையில் உள்ள பணிகளை துவங்கி முடிப்பதற்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டது.