புதுக்கோட்டை, ஆனந்தா பார்க் பொதுநலச் சங்கத்தின் சார்பில் சமயநல்லிணக்க பொங்கல் விழா 

புதுக்கோட்டை, ஆனந்தா பார்க்(நிஜாம் காலனி, என்ஜிஓ காலனி,எஸ்.எஸ்.நகர்) பொதுநலச் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சமயநல்லிணக்க பொங்கல் விழா  நடத்தப்பட்டு வருகிறது.

இதனையொட்டி,இன்று கோலப்போட்டி நடைபெற்றது. வீடுகள் தோறும் வண்ண கோலங்கலால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்தக்கோலப்போட்டியை, சங்கத்தின் கெளரவ தலைவர் அண்ணாமலை, தலைவர் விஸ்வநாதன். கெளரவ செயலர் ஆசிரியர் சௌந்திரராஜன், செயலர் சத்யா, இணைச் செயலர்கள் இப்ராகிம் பாபு, வேளவேந்தன், பொருளாளர் ரத்தினம் , செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கசாமி, சத்தியசீலன்,ஆனந்தன், அஜாருதீன், இறையன்பு ஆகியோர் முன்னின்று நடத்தினர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜனவரி 8ம் தேதி அன்று நடைபெறும் சமய நல்லிணக்க பொங்கல் விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.