புதுக்கோட்டை அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆடி கீர்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை மேல ராஜ வீதிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் ஆடி கீர்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சுவாமிக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது.

பின்னர் தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும்  விநாயகர்க்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது. விநாயகர் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை சிவ ஸ்ரீபாலா ஸ்ரீ குருக்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் சிறப்பாக  செய்திருந்தனர்.