
புதுக்கோட்டை,ஜன.6-
தொட்டியில் அசுத்தம் கலந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று துரை வைகோ கூறினார். புதுக்கோட்டை அருகே இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அந்த கிராமத்திற்கு நேரில் சென்ற ம.தி.மு.க.வின் தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ அந்தப்பகுதியில் உள்ள பட்டியலின மக்களிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது, குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டது மிகவும் இழிவான செயல், கண்டிக்கத்தக்கது. விஞ்ஞான உலகில் இதுபோன்ற இழிவான செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற செயல் தமிழகத்தில் வேறு எங்கும் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்உடன் பார்வையிட்டுஉள்ளனர், தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்வில் நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் மாத்தூர் எஸ்.கே.கலியமூர்த்தி மாவட்ட துணைச் செயலாளர் கே.ஏ.ஆரோக்கியசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் . வழக்கறிஞர் கா.சி.சிற்றரசு வழக்கறிஞர் ராஜா ஆதிமூலம், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மறவப்பட்டி கே.பாண்டியன்நகர்மன்ற உறுப்பினர்கள் அரசி,லதா கருணாநிதி, ரெ.காசிலிங்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.பாண்டியன் மற்றும் ம.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக புதுக்கோட்டை எல்லை கட்டியவயல்பகுதியில் வருகை தந்த ம.தி.மு.க.வின் தலைமை நிலைய செயலாளர்துரை வைகோ.. வை சிறப்புடன் ம.தி.மு.க.வின் கழக நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் மாத்தூர் எஸ்.கே.கலியமூர்த்தி தலைமையில் சிறப்புடன் வரவேற்றனர் .