புதுக்கோட்டை அரிமளம் மெர்க்குரி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மெர்க்குரி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. விழாவினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, மாணவர்கள் பொங்கல் விழா தொடர்பாக ஓவியங்கள் வரைந்து காட்சிபடுத்தினர், பிறகு பொங்கல் விழா தொடர்பாக பாடல்களை மாணவர்கள் பாடி மகிழ்ந்தனர்.

கவிதைகள் மூலம்  பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர், ஜல்லிக்கட்டின் பெருமைகளை மாணவர்கள் நடனம் மூலம் ஆடிகாண்பித்தனர்,  பொங்கல் பண்டிகையை முறையாக கொண்டாடும் விதம் குறித்து முதல்வர் முத்துலெட்சுமி எடுத்து கூறினார், மாணவர்கள் கொண்டு வந்த பொங்கல் பொருட்களை கொண்டு சமத்துவ பொங்கல் செய்து சூரியனுக்கு படையலிட்டு பின்பு மாணவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது, பெற்றோர்கள் அனைவரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்சிகளை ஹிந்தி ஆசிரியர் தர்மராஜ் தொகுத்து வழங்கினார்,முன்னதாக வருகை புரிந்தவர்களை பள்ளி ஆலோசகர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார், நிறைவாக பள்ளி தாளாளர் ரமணன் நன்றி கூறினார், விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்