புதுக்கோட்டையில் வரும் சனிக்கிழமை சில பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

புதுக்கோட்டை நகரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதினால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சையது அகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை 110/22 கேவி நகரியம் மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்வினியோகம் செய்யப்படும் கீழ ராஜு வீதி, தெற்கு இரண்டாம் வீதி, தெற்கு 3ஆம் வீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டம், சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், காந்தி நகர், உசிலங்குளம், கே.எல்.கேஎஸ் நகர், சக்திநகர், மேட்டுப்பட்டி, கலீப் நகர், மருப்பிணிரோடு, திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், செல்லப்பா நகர், அடப்பன் வயல், அம்பாள் புரம், காமராஜபுரம் போஸ்ட் நகர் கணேஷ் நகர் கம்பன் நகர் என் புரம் ஆகிய இடங்களில் 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் அதற்கு ஏற்றார் போல் தங்களது பணிகளை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறும் இந்த அறிவிப்பானது கடைசி நேரம் மாறுதலுக்குட்பட்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.