புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு முகாம்: 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

புதுக்கோட்டை இராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு முகாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது..

முகாமிற்கு வந்திருந்த அனைவரையும் இராணியார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி வரவேற்றுப் பேசினர்..

முகாமினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.பின்னர் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான கற்றல் உபகரணங்களையும்,மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகதாதன் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்துப் பேசினார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டத்தின் மாவட்ட அலுவலர் ரவிசங்கர் கலந்து கொண்டு காப்பீட்டுதிட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்துப் பேசினார்கள்.. 

முகாமில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவர் எஸ்.தங்கமணி,ஜெ.சுதந்திரன் ,புதுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர்கள் செங்குட்டுவன்,அருள்,பிரியா ஆகியோர் கலந்து கொண்டு முகாமின் நோக்கம் குறித்துப் பேசினார்கள்.

உடல் இயக்க மருத்துவர் சதீஷ்குமார்,காது,மூக்கு,தொண்டை மருத்துவர் அருணகிரி,மனநல மருத்துவர் ராஜேஷ்குமார்,கண் மருத்துவர் சமீனா பேகம்,குழந்தைகள் நல மருத்துவர் முத்து ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

முகாமில் உடல் இயக்க குறைபாடுடைய ,பார்வை குறைபாடுடைய,காது கேளாத,மனவளர்ச்சி குறைபாடுடைய 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோசலை மற்றும் புகோட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரானசி டயானா தலைமையில் சிறப்பாசிரியர்கள்,இயன்முறைமருத்துவர்கள்,பகல்நேர பாதுகாப்புமைய ஆசிரியர்கள்,வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்ரகள் செய்திருந்தனர்.