புதுக்கோட்டையில்  புத்தாண்டையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு – பக்தர்கள் சுவாமி தரிசனம்

புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு கோவில்களில் புத்தாண்டையொட்டி  பக்தர்கள்  சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு கோவில்களில்புத்தாண்டு 2023 வருட பிறப்பை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ  முத்துமாரியம்மன் கோயிலில் புத்தாண்டு 2023 – ம் ஆண்டையொட்டி அருள்மிகு  முத்துமாரியம்மனுக்கு  பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடைபெற்றது.  

பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள்  வருகைதந்து    நீண்ட கீயூவிலிருந்து தரிசனம் செய்தனர், ஏற்பாடுகளை நிர்வாகிகள் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.  புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி  திருகோயிலில் புத்தாண்டு 2023 –ம் வருட பிறப்பை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஏற்பாடுகளை பாலாஜி வைரவமூர்த்தி  மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

புதுக்கோட்டை  சாந்தநாதசுவாமி திருக்கோவில்,   மேலராஜ வீதிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திருக்கோகர்ணம்,  பிரஹதாம்பாள் திருக்கோவில்,    பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் திருக்கோவில் திருக்கோகர்ணம்,  கோவில்பட்டி மஹா ஸ்ரீ திரிசூல பிடாரிஅம்மன் கோவிலில்   தெற்கு 4 ம் வீதி  ஆஞ்சநேயர்  திருக்கோவில் உள்ளிட்ட கோவில்களில்  சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.