புதுக்கோட்டையில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது

புதுகை நகரில் நாளை மறுநாள் 19ம் தேதி மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (இயக்கலும், காத்தலும்) கண்ணன் வெியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

புதுக்கோட்டை நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும், கீழராஜவீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், செல்லப்பாநகர் அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய இடங்களில் புதுகையில் நாளை மறுநாள் 19ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.