புதுகை வரலாறு நாளிதழ் நடத்தும் 5ம் ஆண்டு கல்வி கண்காட்சி அனைவரும் வாருங்கள்! அனுமதி இலவசம்!

புதுகை வரலாறு நாளிதழ் நடத்தும் 5ம் ஆண்டு கல்வி கண்காட்சி 2023 ம் ஆண்டு ஏப்ரல் 8,9 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் புதுக்கோட்டை விஜய் பேலஸில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க நம்முடைய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ கண்மணிகள் அரசு பொதுத் தேர்வை எழுதிக் கொண்டிருக்கக்கூடிய இச்சூழலில் அவர்களின் உயர்கல்விக்காக தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களில் இருக்கக்கூடிய பிரபல முன்னணி கல்வி நிறுவனங்கள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் உயர் கல்விக்கு வழிகாட்டும் திருவிழாவை கடந்த ஆண்டுகளை விட  இந்த ஆண்டும் தங்களின் ஆசியுடன் சிறப்பாக நடத்த உள்ளோம்.

இந்த நிகழ்ச்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பெற்றோர், மற்றும் உறவினர்களுடன் பங்கேற்று தங்களுக்கு உண்டான அனைத்து சந்தேகங்களையும் கண்காட்சியில் பங்கேற்கும் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்வுகளை பெற்று தலைசிறந்த கல்வி நிறுவனத்தில் தங்களுடைய உயர்கல்வி கனவை துவங்கி எதிர்கால இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிரச்செய்திடவாரீர் வரவேற்று காத்திருக்கின்றோம்!  வாருங்கள் நேரில் சந்திப்போம்!