புதுகை, புனல்குளம், குளத்தூர் நாயக்கர்பட்டியில் நாளை மறுதினம் மின்சாரம் நிறுத்தம்: மின்வாரியம் அறிவிப்பு

புதுகையில் நாளை மறுதினம் 24ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லெட்சுமி நகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு புதுக்கோட்டை மின் வாரிய உதவி செயற் பொறியாளர்,  இயக்கலும், காத்தலும் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், நாளை மறுதினம் 24ம் தேதி புனல்குளம் தொகுப்பு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சங்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி, சோழகம்பட்டி, நொடியூர், கோமாபுரம், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன்பட்டி, புதுநகர், முதுகுளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

அதேபோல், குளத்தூர் நாயக்கர்பட்டி துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் குளத்தூர் நாயக்கர்பட்டி, நடுப்பட்டி, சேவியர்குடிகாடு, ஆத்தங்கரைப்பட்டி, சாமிப்பட்டி, கீராத்தூர், பருக்கைவிடுதி, குளத்தூர், மூக்கப்புடையான்பள்ளம் ஆகிய பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று  புனல்குளம் மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் வில்சன் தெரிவித்துள்ளார்.