கறம்பக்குடியில் புதிதாக அமைய உள்ள நீதிமன்றத்தை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் நேரில் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையின் படி கறம்பக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே பழைய தாலுகா அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டடத்தை ரூபாய் 20 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு தற்காலிகமாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அந்த கட்டிடத்தில் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் கறம்பக்குடியில் புதிதாக நீதிமன்றம் அமைய உள்ள கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனா்.இதில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,வட்டாட்சியர் இராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன், கறம்பக்குடி காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் முருகேசன், பேரூராட்சி துணைத்தலைவர் நைனா முகம்மது, பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.