புகையில்லா போகி கொண்டாடிட மக்களுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

புகையில்லா போகி பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: வருகின்ற 14 -ஆம் தேதி சனிக்கிழமை அன்று புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த வகையில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாடவும் போகி பண்டிகையின் போது தேவை இல்லாத பொருட்களை ஆங்காங்கே தீயிட்டு  எரிக்காமல் இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நுண் உர செயலாக்கம் மையத்தில் கொடுக்கவும், இதன் மூலமாக நமது மாநகரை காற்று மாசுபடுவதில் இருந்து பாதுகாத்திடவும் அன்புடன் வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.