பிரதமர் மோடி  தாய் ஹீராபென் மறைவுக்கு பொன்னமராவதி பாஜக  கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்

பொன்னமராவதி பாஜக  கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாய் ஹீராபென்  அவர்களின் மறைவுக்கு   மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி பாஜக கட்சி நிர்வாகிகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாய் ஹீராபென்  அவர்களின் மறைவுக்கு   பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக  திருவுருவ படத்தை வைத்து பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்  என ஏராளமானோர் மலர் தூவி. இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பாரதத்திற்கு தலைசிறந்த தவப் புதல்வனாக நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தாய்நாட்டிற்காக அர்ப்பணித்து, நம் பாரத பிரதமரின் அங்கத்தில் சுவாசமாக திகழ்ந்து உலகம் போற்றும் உன்னத மாமனிதனை ஈன்றெடுத்த தாய் ஹீராபென் மோடி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது  எனவும்  மேலும் மறைந்த அன்பு தெய்வத்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.  என பாஜக கட்சி நிர்வாகிகள் கண்ணீர் மல்க மலர் தூவி மரியாதை செலுத்தினர்.