பிரதமரின் ஹைதராபாத் சுற்றுப்பயணம் திடீர் ரத்து – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் ஹைதராபாத் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட் டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது என மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார்.

இதையடுத்து, வந்தே பாரத் ரயில் தொடக்க விழா, ரூ. 7 ஆயிரம் கோடி வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா போன்றவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி வரும் 18, 19 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, செகந்திராபாத் – விசாகபட்டினம் இடையேயான வந்தே பாரத் ரயில் போக்குவரத்து சேவையை தொடக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

மேலும், செகந்திராபாத் – மகபூப் நகர் இடையே 85 கி.மீ. தொலைவிற்கு இரட்டை ரயில் பாதை திட்டம், ஹைதராபாத் ஐஐடிவளாகத்தில் புதிய அகாடமி கட்டிடம், தொழில்நுட்ப பூங்கா, தங்கும் விடுதி கட்டிடம், விருந்தினர் மாளிகை, சுகாதார மையம் போன்றவற்றின் தொடக்க விழா மற்றும் செகந்திராபாத் ரயில்வே நிலையத்தில் ரூ. 699 கோடி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா என மொத்தம் ரூ. 7 ஆயிரம் கோடிக்கான வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடக்கி வைப்பதாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது திடீரென பிரதமர் மோடியின் ஹைதராபாத் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டி ருப்பதாகவும், விரைவில் மாற்று தேதி அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் நேற்று காலை விசாகபட்டினம் வந்தடைந்தது. இது தென்னிந்தியாவின் 2-வது வந்தே பாரத் ரயிலாகும். இந்த ரயில் செகந்திராபாத்திலிருந்து வாரங்கல், விஜயவாடா, விசாகபட்டினம் வரை செல்லும். வெறும் 8.40 மணி நேரத்தில் செகந்திராபாத்திலிருந்து விசாகபட்டினம் வந்தடையும்.

இந்த ரயிலை வரும் 19-ம் தேதிபிரதமர் மோடி செகந்திராபாத்திலிருந்து தொடக்கி வைப்பதாக இருந்தது. ஆனால், தற்போது அந்த நிகழ்ச்சி ஒத்திப்போடப்பட் டுள்ளது.