
பால் விலையை உயர்த்திய தி.மு.க., அரசை கண்டித்து, புதுக்கோட்டை ஒன்றிய பா.ஜ.க., சார்பில் பெருங்களூர் கடைவீதியில் ஆவின் பாலகம் முன் ஒன்றியத் தலைவர் வடவாளம் ஜெகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க., தொழில்துறை பிரிவு மாநில செயலாளர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினார். பா.ஜ.க., மாவட்ட செயலாளர் ஆதனக்கோட்டை மதியழகன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பாண்டியராஜன், சண்முகசுந்தரம் பெரிகுமார், மணிகண்டன், ராஜமாணிக்கம், பாலா ரமேஷ் உட்பட மாவட்ட, ஒன்றிய பா.ஜ.க., நிர்வாகிகள், கிளைத்தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தி.மு.க., அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா., கட்சிகளிலிருந்து விலகி, பா.ஜ.க.,வில் புதிதாக இணைந்த 30 பேருக்கு கணேசன் சால்வைகள் அணிவித்து வரவேற்றார். ஒன்றிய பொதுச்செயலாளர் மாத்தூர் குமார் நன்றி கூறினார்.