பால், மின் கட்டண உயர்வு கண்டித்து பா.ஜ.க.,வினர் கண்டன முழக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் செல்வ அழகப்பன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பால் விலை ஏற்றதற்கு எதிராகவும், மின்கட்டண உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் பா.ஜ.க.,வினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய தலைவர் பழ.சக்திவேல், மாவட்ட பொருளாளர் அம்பாள் சுகன்யா, விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் பாண்டியராஜன், சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் செல்வராஜ், ஒன்றிய பொதுச்செயலாளர் பெரி.கிருஷ்ணன், வடிவேல், ஒன்றிய துணைத் தலைவர் பாலமுருகன் பொருளாளர் பரமசிவம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.,வினர் கலந்து கொண்டனர்.