பாம்புகோவில் சந்தை முதல் கடையநல்லூர் வரை புதிய வழித்தடபேருந்து சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி

சங்கரன்கோவில் ஒன்றியம், பாம்புக்கோவில் முதல் கடையநல்லூர் வரை புதிய பேருந்து வழித்தடம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பாம்புக்கோவில் முதல் கடையநல்லூர் புதிய பேருந்து வழித்தட சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புளியங்குடி அரசுப் போக்குவரத்து பணிமனை மேலாளர் முருகன் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், அகில இந்திய முஸ்லிம் லீக் தென்காசி மாவட்ட செயலாளர் செய்யதுபட்டாணி முன்னிலை வகித்தனர். இதில் எம்எல்ஏக்கள் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா, தி.சதன் திருமலைகுமார் ஆகியோர் கலந்துகொண்டு வழித்தட சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த பேருந்து பாம்புகோவிலில் இருந்து கிளம்பி வேட்டரம்பட்டி, திருவேட்டநல்லூர், புன்னைவனம் சிங்கிலிபட்டி,சொக்கம்பட்டி வழியாக கடையநல்லூர் செல்கிறது. இந்த நிகழ்ச்சியில் கிளை செயலாளர் ஹைதர் அலி, ஊராட்சி மன்ற தலைவர் செய்யது இப்ராஹிம், முகைதீன், அப்துல்காதர், காதர்ஒலி, மாரியப்பன், தேவசகாயம்,யூசுப்,அப்பாஸ்,மூசா, ஈஸ்வரன், முக்கையா, தர்மராஜ், கடல்துரை, அருணகிரி, பாலமுருகன், வைரமுத்து மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.