பாபர் மசூதி இடிப்பு தினத்தை கண்டித்து அறந்தாங்கியில் த.மு.மு.க., ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை கண்டித்து அறந்தாங்கியில் த.மு.மு.க., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கடந்த 1992ம் ஆண்டு டிச., 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த நாளை இஸ்லாமிய மக்கள் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு, பாபர் மசூதி இடிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று மத்திய பா.ஜ., அரசை கண்டித்து அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. த.மு.மு.க., கிழக்கு மாவட்ட தலைவர் சேக்தாவூதீன் தலைமையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.