
பாகிஸ்தான் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 59 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் பலூசிஸ்தான், கைபர் பக்துவா ஆகிய மாகாணங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக 8 அணைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல சாலைகள் துண்டிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 59 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.