பழனி அருகே பொருந்தலாறு நியாயவிலை கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அலகழிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பொருந்தலாறு டேம் பகுதியில்,500  குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர், இங்கு வசித்து வருபவர்கள், மீன் பிடித்தல்,  மற்றும்,கூலி தொழில் செய்து வருகின்றனர், இந்நிலையில் பொருந்தலாறு நியாய விலைகடையில் ரேசன் பொருட்கள் வாங்க வருபவர்களை, இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மருதகாளியம்மன் கோவில் அருகே சென்று கைரேகை வைத்து விட்டு, அங்கிருந்து டோக்கன் வாங்கி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நியாய விலை கடைக்கு வந்து  நீண்ட நேரம் வரிசையில் நின்று பொருடகளை பெற்று கொள்ளும் அவலநிலை தொடர்வதாகவும், மேலும் அன்றாடும் கூலி

வேலைக்கு செல்லும் மக்கள்  மருதகாளியம்மன் கோவில் அருகில் சென்று   நீண்ட நேரம் வரிசையில் நின்ற பிறகு , கைரேகை விழாதா காரணத்தினால், ஒன்று அல்லது இரண்டு நாட்கள், வேலைக்கு செல்லாமல் காத்திருப்பதால், வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், மற்றும் இரண்டு சக்கர மோட்டார் வாகணம் இல்லாததால் , மருதகாளியம்மன் கோவிலுக்கு டோக்கன் பதிவு செய்ய இரண்டு கிலோமீட்டர் தூரமும், பிறகு ரேசன் பொருட்கள் வாங்க இரண்டு கிலோமீட்டர் மீட்டர் தூரம், நியாய விலை கடைக்கு நடந்து வருவதால், வயதான முதியவர்கள், சிரமப்படுவதாகவும், அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கூறிவருகின்றனர், மேலும் பழனி கோட்டாட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும்,கருத்து தெரிவித்து வருகின்றனர்.