பழனியில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் 70 டன் அரிசி திருட்டு தொடர்பாக 5 பேர் பணியிடை நீக்கம்

பழனியில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் 70 டன் அரிசி மூட்டைகள் காணாமல் போனது தொடர்பாக 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  

பழனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருப்பில் வைக்கப்பட்டிருந்தது அரிசி மூட்டைகள் மாயமாக போனது தொடர்பாக 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

பழனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் கடந்த வாரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மதுரை மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது கிடங்கில் இருந்த 70 டன் அரிசி மூட்டைகள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து மண்டல் உயர் அதிகாரிகளுக்கு ஆய்வு செய்த அறிக்கையை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் நுகர்பொருள் வாணிப கிடங்கு பொறுப்பாளர் தர்மராஜ், உதவி பொறுப்பாளர் ஜெய்சங்கர் மற்றும் இளநிலை உதவியாளர் ரங்கசாமி, பட்டியல் எழுத்தாளர் ஆறுமுகம், உலகநாதன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் காணாமல் போன 70 டன் அரிசி மூட்டைகள் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.