பள்ளிக்கல்வித்துறை கல்வி சாரா செயல்பாடுகளளுக்கான  போட்டிகள் கந்தர்வகோட்டையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக மாதம் தோறும் ஒளிபரப்பப்படும், சிறார் திரைப்படம் ,

பள்ளி நூலகங்களில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் சார்ந்த திறனாய்வு செய்தல்,பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு வெளியிடும் சிறார் மாத இதழான தேன் சிட்டு இதழில் வரும் அறிவுசார் தகவல்கள் சார்ந்த வினாடி வினா போட்டி ஆகியவற்றிற்கான வட்டார அளவிலான தேர்வு கந்தர்வகோட்டை ஊராட்சி 

 ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.

 இந்த போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணியினை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும், புதுக்கோட்டை தொன்மை பாதுகாப்பு மன்ற  பொறுப்பாசிரியருமான ஆ. மணிகண்டன் ஒருங்கிணைத்தார். 

வட்டாரக் கல்வி அலுவலர் ஆ. வெங்கடேஸ்வரி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சோ. விஜயலட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சுரேஷ்குமார், ஆசிரியர் பயிற்றுனர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இல்லம் தேடிக் கல்வியின் வட்டார ஒருங்கிணைப்பாளர் அ. ரஹ்மத்துல்லா வரவேற்றார்.   முதலிடம் பெற்று

கீழ்கண்ட மாணவர்கள் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான கதை எழுதுதல் போட்டிக்கு அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  கல்பனா, வினாடி வினா போட்டியில் துவார் உயர்நிலை பள்ளி மாணவர்கள் யுவஸ்ரீ, பாலமுருகன் ஆகியோரும் , சிறார் திரைப்படமான சார்லி சாப்ளின் இயக்கி நடித்த 

தி மார்டன் டைம்ஸ் திரைப்படம் குறித்த  திறனாய்வு  செய்யும் போட்டியில், குளத்தூர் நாயகர்பட்டி உயர்நிலை பள்ளி மாணவி காவியா ஆகியோரும் செய்யப்பட்டனர். இந்நிகழ்விற்கு நடுவர்களாக ஆசிரியர்கள் பாக்யராஜ், சோம. சரவண மூர்த்தி, சுதா, ஆனந்தராஜ்,உஷா   செயல்பட்டனர்.

இறுதியாக ஆத்தங்கரை விடுதி பட்டதாரி ஆசிரியர் பழனிச்சாமி நன்றி தெரிவித்தார்.