பசும்பொன் புலிகள் அமைப்பு சார்பில் தேவர் ஜெயந்தி விழா அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில், பசும்பொன் புலிகள் அமைப்பு சார்பில், 114 வது தேவர் ஜெயந்தி விழா, ராஜராஜசோழனின் 1036 வது சதய விழா, 220 வது குருபூஜை விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பூர் மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, பா.ஜ.க., மாவட்ட தலைவர் செந்தில்வேல், ஆகியோர் கலந்து கொண்டு பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் உருவப்படத்துக்கு மரியாதை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.விழாவின் முத்தாய்ப்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு பசும்பொன் புலிகள் அமைப்பு நிறுவனத்தலைவர் ராஜா வாண்டையார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மனோஜ்குமார், மாநில தலைவர் சரவணராஜா, திருப்பூர் மாவட்ட செயலாளர் மருதுபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்து மகா சேவா சங்க மாநில இளைஞரணி செயலாளர் ஆனந்தராஜ், பசும்பொன் புலிகள் அமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் தரணீஷ், அண்ணாதுரை பசும்பொன் பேரவை தலைவர் பி.சுரேஷ், மூவேந்தர் முன்னேற்றக்கழக துணை தலைவர் தர்மராஜ், வழக்கறிஞர் சுப்புராஜ், அதிமுக இளைஞரணி மேடை முத்தையா, ஐடி விங் முரளி், முருகன். உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 61 = 69