நேரு யுவகேந்திரா சார்பில்
மழை நீரை சேகரிப்போம்_ சிக்கனமாக பயன்படுத்துவோம்
காணொளி வாயிலான இளையோர் கருத்தரங்கம்

இந்திய அரசு, புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கும் இளையோருக்குமான காணொளி வாயிலான கருத்தரங்கம் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களுக்கும் தனித்தனியாக நடைபெற்று வருகிறது. இதில் கறம்பக்குடி மற்றும் மணமேல்குடி பகுதி பொதுமக்கள் மற்றும் இளையோருக்கான காணொளி கருத்தரங்கம் புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. நேரு யுவகேந்திரா திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி வேதியியல் துறை தலைவர் முத்துக்குமார் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும் அதனை சிக்கனமாக உபயோகித்தல் குறித்தும் கருத்துரை வழங்கினார். நிகழ்வில் கறம்பக்குடி மற்றும் மணமேல்குடி ஒன்றியங்களைச் சார்ந்த சுமார் 60 இளையோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர்கள் ஹரிஹரன், மணிமேகலை, வசந்தகுமார் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1