
நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேரூரை ஆற்றுகிறார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் நாமக்கல் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலுவாம்பட்டியில் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நரிக்குறவ இன மக்களிடம் கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார்.அதன்பிறகு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பத்தாரிடம் அவர் கலந்துரையாடி வீட்டில் தேநீர் அருந்தினார்.