நாமக்கல் அருகே சாக்கடை வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே சாக்கடை வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் நாமக்கல் எம்.எல்.ஏ பங்கேற்றார்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் செல்லப்பம்பட்டி ஊராட்சியில் புதன்சந்தை முதல் உடுப்பம் செல்லும் சாலையில் (கழிவுநீர்) சாக்கடை வாய்க்கால் அமைக்கும் பணிக்கு இன்று பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பி.இராமலிங்கம் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் துரை என்கிற ராமசாமி, செல்லப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன், துணைத் தலைவர் சத்யபமா வேல்முருகன் மற்றும் செல்லப்பம்பட்டி முன்னாள் ஊராட்சிதலைவர் சுரேஷ், முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை, செல்லப்பம்பட்டி முன்னாள் கவுன்சிலர் முருகேசன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராம்குமார், கரடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கம்மாள் முத்துசாமி, தத்தாத்திரிபுரம் முன்னாள் தலைவர் டி.எஸ்.ராமசாமி மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

மேலும் கிளைச் செயலாளர் வரதராஜன், சண்முகம், நல்லுசாமி, ரங்கசாமி, கௌதம், செந்தில்குமார், பொன்னுசாமி, சிவகுமார், தர்மலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.