நகைச்சுவை நடிகர் விக்னேஷ்காந்த் திருமணம்

ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, கார்த்தியின் ‘தேவ்’, ‘மெஹந்தி சர்க்கஸ்’ உட்பட சில படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருப்பவர் விக்னேஷ்காந்த்.

சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ள இவர், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கிறார். இவருக்கும் ராசாத்தி என்பவருக்கும் மே மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருச்சியில் புதன்கிழமை திருமணம் நடந்துள்ளது. நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஞானசம்பந்தம் உட்பட பலர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.