புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவில் ஒன்றான பொங்கல் விழாவை முன்னிட்டு பொன்னமராவதி பொங்கல் சந்தை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல ஆயிரக்கணக்கானோர் சந்தைக்கு வந்திருந்து தங்களின் தேவைக்கு ஏற்ற பொருட்களான கரும்பு,மஞ்சள் கிழங்கு, உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை வியாபாரிகளிடம் வாங்கிச் சென்றனர். இதனால் பொன்னமராவதி பகுதியில் உள்ள சந்தை கலை கட்டியது. இதனால் பொங்கல் சந்தையில் வியாபாரம் செய்த வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.