தேர்தல் முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் பிரமுகரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் கடந்த 2012 ஆம் ஆண்டு கணபதிபுரத்தை சேர்ந்த பழனிவேல் உடையார் மகன் காங்கிரஸ் பிரமுகர் ஆனந்தராஜ் தேர்தல் முன்விரோதம் காரணமாக 12 பேர் கொண்ட கும்பல்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் இளையராஜா, முத்து, பிரகாஷ், ஆசைத்தம்பி, திருநாவுக்கரசு, குட்டிமணி, மதி, கருணாநிதி, மார்க்கண்டையன் இவர்கள் அனைவரும் கணபதிபுரத்தை சேர்ந்தவர்கள். திருச்சி பொன்மலை வடக்கு ரயில்வே காலனி சேர்ந்த கனகராஜ் மகன் பாஸ்கர் இவர் மீது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி குப்பங்குளம், கண்ணன் ஸ்டோர் பாலகிருஷ்ணன் மகன் மதன்குமார், திருச்சி கருப்பையா மகன் மாரி என்ற மாரியப்பன் ஆகியோரில் இளையராஜா மற்றும் முத்து என்ற இரண்டு நபர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பாஸ்கர், மதன் மற்றும் மாரியப்பன் ஆகிய மூன்று பேருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மற்ற ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் இவர் அந்த பகுதியில் மாவட்ட கவுன்சிலர் ஆகவும் பலமுறை ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இளையராஜா கூலிப்படையை வைத்து கடந்த 13.11.2012 அன்று ஆனந்தராஜை ஆதனக்கோட்டையில் வெட்டி படுகொலை செய்தார். இது தொடர்பாக ஆதனக் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜா, முத்து, பாஸ்கர், மதன், மாரியப்பன் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது
அரசு தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.செந்தில் குமார் ஆஜராகனார்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாபுலால் குற்றவாளி இளையராஜா மற்றும் முத்து ஆகிய இரண்டு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாத கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதேபோன்று குற்றவாளிகள் பாஸ்கர், மதன், மாரியப்பன் ஆகிய மூன்று பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் தலா மூன்று மாத கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.