தென்காசி ரயில் நிலையத்தில் உலக வன உயிரின நாள் விழா

தென்காசி ரயில் நிலையத்தில் உலக வன உயிரின நாள் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு வனத்துறை மற்றும் தென்னக ரயில்வே இணைந்து நடத்திய உலக வன உயிரின நாள் விழா தென்காசி ரயில் நிலையத்தில் நடந்தது. இதில் வரவேற்புரை ஆற்றிய ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா, வன உயிரினங்களின் முக்கியத்துவம் மற்றும் மரங்கள் நடுவதின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். மரம் நடும் விழாவை தொடங்கி வைத்து பேசிய ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் சங்கரன்கோவில் ராஜா, தமிழ்நாடு அரசு மரம் நடுவதை ஊக்கப்படுத்தி வருகிறது. மரங்கள் நடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி ரயில் நிலையத்தில் தற்போது மரங்கள் வெட்டப்பட்டு வந்த நிலையில் சில வருடங்களில் நிறைய மரங்கள் வளர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். மரம் நடுவது முக்கியமல்ல அதனை நல்ல முறையில் பராமரித்து பெரிய மரமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தென்காசி பிராணா அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வன அலுவலர் முருகன்  உத்தரவின்படி, குற்றாலம் வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன்  மேற்பார்வையில், குற்றாலம் பிரிவு வனவர் பிரகாஷ், மதுரை ரயில்வே கோட்ட  சுகாதார மேற்பார்வையாளர் ராச்செலின் ஜெனிலா, தென்காசி ரயில் பயணிகள் சங்கத் தலைவர் வெங்கடேசன், பசி இல்லா தமிழகம் நிர்வாகி முகமது அலி ஜின்னா,  பிராணா மரம் வளர் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், ரயில்வே துறை அதிகாரிகள், ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.