தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற மூன்றாம் பாலினத்தவர் மறுவாழ்விற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மூன்றாம் பாலினத்தவர் குறைதீர் முகாமில் வங்கி கடன் உதவி, சுய வேலைவாய்ப்பு முகாம், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதிய திட்டம், மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, இலவச வீட்டு மனைப்பட்டா, புதிய குடும்ப அட்டை வழங்குதல், மூன்றாம் பாலினத்திற்கான நல வாரிய அட்டைகள் உள்ளிட்ட இதர மனுக்கள் என மொத்தம் 153 மனுக்கள் பெறப்பட்டது.
இம்முகாமில் 27 மருத்துவ காப்பீடு திட்ட அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், தனித்துணை ஆட்சியர் ஷீலா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.