தென்காசி மாவட்டம்  மங்களாபுரம் ருக்மணி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

தென்காசி மாவட்டம்  மங்களாபுரம் ருக்மணி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது, இதில் தலைமை நிதின் நீத்து நாச்சியார், தாளாளர் செல்வராஜ், செயலாளர் சத்திய கலா தீபக், முதல்வர் குளோரிஞானம் ருக்மணி கல்வியியல் கல்லூரி, சமத்துவ பொங்கலை முன்னிட்டுஇரண்டு தினங்களாக விளையாட்டுப் போட்டிகளான முறுக்கு கடித்தல், லெமன் மற்றும் ஸ்பூன், ஊசி நூல் கோர்த்தல், கயிறு இழுத்தல், குண்டு எறிதல், தட்டு எறிதல், உருளைக்கிழங்கு பொறுக்குதல், பலூன் உடைத்தல், பந்து கடத்துதல், மியூசிக் சேர் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

மேலும் அதனைத் தொடர்ந்து சமத்துவ பொங்கல் உடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது,இந்நிகழ்ச்சியில் அனந்தபிள்ளை, சுப்புராஜ், வேலம்மாள், முருகேசன், ஸ்ரீதேவி, சங்கீதா, கண்ணன், அமுதா மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியுடன் சமத்துவ பொங்கல் வைத்து விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.