
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் எழுமின், விழுமின், குறி சாரும் வரை நில்லாது உழைமீன், நூறு இளைஞர்களை என்னிடம் கொடுத்தால் இந்த பாரதத்தை புது பாரதம் ஆக்குவேன் என்று வீரமுழக்கமிட்ட வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 160- வது பிறந்த நாளை முன்னிட்டு புளியங்குடி நகர பாரதிய ஜனதா கட்சி, மற்றும் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் விஸ்வ குல சமுதாய நலக்கூடம் புளியங்குடியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 18 முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள், ரத்தம் வழங்கலாம், கல்லூரி மாணவ, மாணவியர்கள் ரத்தம் வழங்கலாம், பொது மக்களுக்கு இலவசமாக ரத்த மாதிரிகள், மற்றும் பிரஷர், சுகர், பார்க்கப்படும் ரத்தம் வழங்குபவர்களுக்கு அரசு மருத்துவமனையின் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும், ரத்தம் வழங்குபவர்களுக்கு மரக்கன்று வழங்கப்படும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறையும், ரத்த தானம் செய்த பின் புதிதாய் சிவப்பு அணுக்கள் உடலில் உற்பத்தியாகின்றன என்ற விளக்க உரைகள் எடுத்துரைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நகர பாரதிய ஜனதா இளைஞர் அணி சார்பாக தலைமை ந.சண்முகசுந்தரம், நகரத் தலைவர் பிஜேபி, சேகர் இளைஞர் அணி நகரத் தலைவர், எ. மாரியப்பன் நகர் பொதுச் செயலாளர், கே. கணேசன் நகர செயலாளர், பொன் சரோஜினி நகர மகளிர் அணித் தலைவர், மகேஸ்வரி நகர செயலாளர், சங்கர் மாவட்ட பொதுச் செயலாளர், மகேந்திரன் நகர வர்த்தக பிரிவு தலைவர், தெய்வலால் அத்வானி நகர பிரச்சார அணித் தலைவர், நாகராஜ் நகர இளைஞரணி செயலாளர், வைரமுத்து, ராமசாமி, கணேசன் நகர இளைஞரணி பொருளாளர், கருப்பசாமி நகர வர்த்தக பிரிவு செயலாளர், தங்கமாரி உள்பட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு ரத்ததான விழாவை சிறப்பித்தனர்.