சொக்கம்பட்டி ஊராட்சியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சமத்துவ பொங்கல் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு தென்காசி மாவட்ட உதவி இயக்குனர் பிரான்சிஸ் மகாராஜன் வருகை புரிந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களை பாராட்டி சீருடை வழங்கி சிறப்பித்தார்.
விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் க. பச்சமால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் க.செல்வகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாலதி,ராமலட்சுமி, மாடசாமி என்ற தங்கம்,ராஜா மறவன், மகாலட்சுமி, உலகாத்தாள்,ஈஸ்வரி, பரமேஸ்வரி,சாகிதா பானு, கோமதி சங்கர், வள்ளிநாயகம்,சுய உதவி குழுவினர், பணித்தள பொறுப்பாளர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், ஊராட்சி செயலர்ராமர், நன்றி தெரிவித்தார்.